மதுரையில் 'ஸ்பா' என்ற பெயரில் நடந்த விபச்சாரம்... 3 பேர் அதிரடி கைது.!

மதுரையில் உள்ள அண்ணா நகரில் ஸ்பாவில் விபச்சாரம் நடைபெற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஸ்பா மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக மகாலிங்கம் என்பவர் அளித்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் சோதனையில் அந்த மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதியானது இதனைத் தொடர்ந்து ஸ்பாவில் பணியாற்றிய தீபன் பிரகாஷ் மற்றும் சோனை ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரின் மீது விபச்சார தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.