10 வயது சிறுமி பாலியல் கொலைவழக்கு..! பாலியல் குற்றவாளியின் அதிர வைக்கும் வாக்குமூலம்...!



Shocking confession of 10 years old girl murder in chennai

சென்னையில் தங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து, 3 வது மாடியில் இருந்து தூக்கி வீசி இளைஞர் ஒருவர் செய்த காரியம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பான குற்றவாளியின் வாக்குமூலம் மக்களை மேலும் திடுக்கிட செய்துள்ளது.

சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியில் தங்கியிருந்த ராஜஸ்தானை சேர்ந்த குடும்பத்தை சார்ந்த 10 வயது சிறுமி ஒருவரை திண்டிவனத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான சுரேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் போலீசார் விசாரணையில் தனது வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Crime

அதில், சம்பவத்தன்று இரவு வெளியே நின்று செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த சிறுமி கழிவறை நோக்கி வருவதை பார்த்து, அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். டிவி பாக்கலாம் வரியா என கேட்டதற்கு சிறுமி சரி என்று கூறி வீட்டிற்குள் வந்தார். சிறுமி வீட்டிற்குள் வந்ததும் கதவை பூட்டிவிட்டு அவரிடம் தப்பாக நடக்க முயற்சித்தேன்.

இதனால் சிறுமி கத்தி கூச்சலிட ஆரம்பித்தாள். இதனால் பயந்துபோய் அவரது வாயில் கை வைத்து மூடினேன். இதில் மூச்சுத்திணறி அவள் மயங்கிவிட்டாள். கண்விழித்தால் நம்மை காட்டிக்கொடுத்துவிடுவாள் என்று பயந்து சிறுமியை மூன்றாவது மாடிக்கு தூக்கிச்சென்று அங்கிருந்து கீழே வீசி கொன்றதாக குற்றவாளி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.