தமிழகம் லைப் ஸ்டைல்

மக்களுக்கு அடி மேல் அடி! திடீரென உயர்த்தப்பட்ட ஷேர் ஆட்டோ கட்டணம்!

Summary:

Share autos rate increased because of petrol diesel rate

சென்னையில் பேருந்து, ரயில் போக்குவரத்தை அடுத்து மக்களின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருப்பது ஷேர் ஆட்டோதான். ஏழை, பணக்காரன் என வித்தியாசம் இல்லாமல் தங்களது பயணத்தை சுலபமாக்கிக்கொள்ள அனைவரும் பயன்படுத்துவதும் ஷேர் ஆட்டோதான்.

அன்றாட வேளைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவர்க்கும் பழக்கமாகிவிட்டது இந்த ஷேர் ஆட்டோ. மக்கள் மத்தியில் ஷேர் ஆட்டோ பிரபலமானதற்கு முக்கிய காரணம் அதன் குறைந்த விலைதான். ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இன்று ஷேர் ஆட்டோக்களின் பயண தொகையும் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் சராசரியாக 5 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், தியாகராயநகரில் இருந்து அண்ணா நகருக்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும்; முகப்பேர் மேற்கு பகுதிக்கான கட்டணம் 35 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூரில் இருந்து வள்ளூவர் கோட்டத்திற்கு 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், தியாகராய நகருக்கான கட்டணம் 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அண்ணாநகர் எல்.ஐ.சி இடையேயான கட்டணம் 25 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகியுள்ளது.

தற்போது மஞ்சள் நிற ஷேர் ஆட்டோகளின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. டாடா மேஜிக் எனப்படும் வெள்ளை நிற ஷேர் ஆட்டோகளில் குறிப்பாக, வாடகைக்கு எடுத்து இயக்கப்படும் வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டண உயர்வால் அன்றாட செலவினங்கள் அதிகப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Advertisement