பள்ளியில் பாலியல் தொல்லை, ஆசிரியையிடம் ஆபாசம் காட்டிய நிர்வாகி..!!

பள்ளியில் பாலியல் தொல்லை, ஆசிரியையிடம் ஆபாசம் காட்டிய நிர்வாகி..!!


Sexual abuse in School

லங்குளம் என்னும் ஊரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது அதில் ஏறத்தாழ 150 மாணவர்கள் கல்வி கற்று  வருகிறார்கள்.  இதில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த பெண் தனக்கு பள்ளியில் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆலங்குளம் அருகே வசித்து வரும் பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் அவருடன் பணிபுரிந்து வரும் நிக்சன் என்பவர் பெண் ஆசிரியரிடம் தவறாக நடந்து கொள்வதாகவும்,  ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். 

இதனை பலமுறை கண்டித்தும் அவர் கேட்பதாக இல்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அப்பள்ளி நிர்வாகி அந்தோணியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்தோணி தொல்லை கொடுத்த நபருக்கு ஆதரவாக பேசியுள்ளார். மேலும் இங்கே இப்படித்தான், இதெல்லாம் சகஜம் உனக்கு விருப்பம் இல்லை என்றால் வேலையை விட்டு போ என்று கூறியதுடன், இதை வெளியில் சொன்னால் அவ்வளவுதான் என்று மிரட்டி உள்ளார்.

இதனால் பள்ளி நிர்வாகத்திடம் நியாயம் கேட்க பெண் ஆசிரியர் அவரது உறவினர்களோடு பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்று தெரிகிறது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பெண்ணிடம் புகார் பெற்றுக்கொண்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.