8 மாவட்டங்களுக்கு மழை அலெர்ட்.. இன்று தயாராக இருங்க மக்களே.! 

8 மாவட்டங்களுக்கு மழை அலெர்ட்.. இன்று தயாராக இருங்க மக்களே.! 


sep 17 2023 weather update

இன்று மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக புதுச்சேரி, தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Rain alert

அந்த வகையில் தமிழகத்தின் மத்திய மற்றும் வட மாவட்டங்களான கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளையில் இருந்து செப்டம்பர் 20ஆம் தேதி வரை புதுச்சேரி காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதி காரைக்கால் புதுச்சேரி தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Rain alert

சென்னையை பொருத்தவரை அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரில் ஒரு சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.