இதுக்கும் ஆதார் இணைப்புக்கும் சம்பந்தம் இல்லை..! வீணா வதந்திய பரப்பாதீங்க: செந்தில் பாலாஜி அதிரடி..!

இதுக்கும் ஆதார் இணைப்புக்கும் சம்பந்தம் இல்லை..! வீணா வதந்திய பரப்பாதீங்க: செந்தில் பாலாஜி அதிரடி..!



Senthil Balaji said that even if a person has five electricity connections, 100 units of free electricity will continue.

ஒருவர் ஐந்து மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும், சிறப்பு முகாமில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, எவ்வளவு பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர் என்ற விவரம் அரசிடம் இல்லை. மின் இணைப்பு பெற்றவர்களில் எத்தனை பேர் சொந்த வீட்டில் வசிக்கின்றனர் என்ற விவரமும் அரசிடம் இல்லை. 

இதுவரை, 2.33 கோடி பேரில் 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். நட்டத்தில் இயங்கும் மின் வாரியத்தை சரிசெய்யவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். மேலும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் ஆதார் எண்ணை இணைத்தாலும் இப்போது இருக்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.

ஏற்கனவே அமலில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து இருக்கும் இலவச மின்சாரம் ரத்தாகும் என்ற தகவல் தவறானது. சிறப்பு முகாமுக்கு வருவோர் மின் இணைப்பில் கெடுத்துள்ள செல்போன் எண்ணுடன் வந்தால் எளிதாக ஆதாரை இணைக்கலாம். மேலும் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு உள்ளவர்களும் ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.