BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
BREAKING: சற்று முன்.. தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்த செங்கோட்டையன்! நொடிக்கு நொடி அடுத்தக்கட்ட அரசியல் மூவ்!
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த சமீபத்திய முடிவுகள் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக அவர் விஜயை நேரில் சந்தித்தது தமிழக வெற்றிக்கழக சார்பில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்குவதாகக் கருதப்படுகிறது.
விஜய் இல்லத்தில் ரகசிய ஆலோசனைக் கூட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தார். இதற்கிடையில் செங்கோட்டையனும் விஜய் இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.
இதையும் படிங்க: BREAKING: MLA பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்! "ஒரு நாள் பொறுத்திருங்கள் " நாளை தவெக விஜய் கட்சியில் இணைவது உறுதி..!!
AIADMK-ல் நீக்கம், பின்னர் ராஜினாமா
எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று கோபி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றிருந்த அவர் தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இது அவர் எடுத்த மிகப்பெரிய political decision ஆக கருதப்படுகிறது.
வெற்றி கழகத்தில் இணையும் சாத்தியம் உறுதி
செங்கோட்டையன் திமுக அமைச்சர்களையும் சந்தித்ததாக தகவல்கள் வந்துள்ள நிலையில், தற்போது விஜயை நேரில் சந்தித்தது அவரது அடுத்த அரசியல் நடவடிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது. நாளை அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவது உறுதி எனக் கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் புதிய மாற்றத்துக்கான அடித்தளமாக இந்த சந்திப்பு மாறி, அடுத்த சில நாட்களில் மேலும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்! "ஒரு நாள் பொறுத்திருங்கள் " செங்கோட்டையனின் பதில்! தூக்குக ஆள அளேக்கா சலசலப்பு!