கோயம்புத்தூரில் களைகட்டும் கஞ்சா சாக்லேட் விற்பனை; போலீசார் அதிரடி சோதனை..!

கோயம்புத்தூரில் களைகட்டும் கஞ்சா சாக்லேட் விற்பனை; போலீசார் அதிரடி சோதனை..!



Selling weed-killing cannabis chocolate in Coimbatore; Police active search..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறையினர் தகவலின் அடிப்படையில் கருத்தம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகில் சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்த ஒருவரை காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது அவர் வைத்திருந்த பையில் ஏகப்பட்ட கஞ்சா சாகரட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் பீகாரை சேர்ந்த மகேஷ்குமார் என்பது தெரியவந்தது. 

அதுமட்டுமின்றி மகேஷ் குமார் அப்பநாயக்கன்பட்டியில் ஹோட்டல் நடத்தி வருவதும் தெரியவந்தது. மகேஷ் குமார் மில்களில் வேலை செய்யும் வட மாநில வாலிபர்களுக்கு கஞ்சா சாக்லேட் களை விற்பனை செய்துள்ளார். 

காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மகேஷ் குமாரை கைது செய்தனர். மேலும் மகேஷ்குமாரிடம் இருந்து 4000 கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 2 3/4 கிலோ கஞ்சா போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.