சேலம் செவிலியர் சிவகாமிக்கு நேர்ந்த சோகம்; அதிர்ச்சியில் சேலம் வாசிகள்!

selam sevilearukku nerntha kodumai


selam-sevilearukku-nerntha-kodumai

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சீனிவாசன்,  சிவகாமி.   சிவகாமி ஓமலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவம் நிகழ்ந்த அன்று சிவகாமி வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டார். இந்நிலையில் சீனிவாசன் பணி நிமித்தமாக சேலத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஓமலூர் அருகே பச்சனம்பட்டி என்ற இடத்தில் தனது பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்த வேளையில் மேட்டூரில் இருந்து சேலத்திற்கு அசுர வேகத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் ஒன்று அவரது பைக்கில்  மோதியதில் சீனிவாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.  இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Tamil Spark

இந்நிகழ்வை,  கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை தூக்கிக்கொண்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்கள்.  அங்கு இருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.   அவர் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவருடைய முகம் முழுவதும் ரத்தக்கறை படிந்து இருந்ததால் யார் என்று அடையாளம் காண இயலவில்லை

இந்நிலையில்,  மருத்துவரின் அறிவுறுத்தலின்படி அவரின் முகத்தில் உள்ள ரத்தக் காயங்களை அவருடைய மனைவி சிவகாமி துடைத்துள்ளார். அப்பொழுதுதான், தனது கணவர் என்று அடையாளம் கண்டுள்ளார் இதில் பெரிய சோகம் என்னவென்றால் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்தது முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது.

இறந்தது தனது கணவர் தான் என்று தெரிந்து கொண்ட செவிலியர் தன் கணவரை கட்டி அணைத்து அழுது புரண்டுள்ளார். மருத்துவமனை  வளாகத்தில் இத்துயர காட்சியை கண்ட ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.