புதிய கார் வாங்கி பூஜை போட்ட சீமான்..! விலை எவ்வளவு தெரியுமா.?seeman new car

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். கருப்பு நிறத்தில் வாங்கப்பட்டுள்ள டொயாட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் ரக காருக்கு திருப்போரூர் முருகன் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

ருபாய் 51 லட்சம் மதிப்பில் வாங்கிய அந்த காருக்கு கோயிலில் மாலையிட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள், சீமான் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சீமான் எந்தவொரு நல்லகாரியம் செய்தாலும் திருப்போரூர் முருகன் கோயிலில் வழிபடுவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் தனது குழந்தைக்கு திருப்போரூர் முருகன் கோயிலில் மொட்டை அடித்து எடைக்கு எடை அரிசி, வெல்லம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சீமான், தனது புதிய காரை திருப்போரூர் முருகன் கோயிலில் பூஜை செய்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.