தமிழகம்

கொரோனா சமயத்தில் டியூசனுக்கு சென்ற மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.! வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய்.!

Summary:

தனியார் பள்ளி மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு அடுத்த, மேல்மணபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், 14 வயது சிறுவன். இவர், செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக 14 வயது சிறுவன் படிக்காமல் எப்போதும்  விளையாடிக்கொண்டே இருந்துள்ளான். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் கார்த்திக், உங்களது மகனை என்னிடம் டியூசன் அனுப்புங்கள், நான் படிக்க வைக்கிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் கார்த்திக், சிறுவனுக்கு உடல் ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுவன் மறுப்பு தெரிவித்ததால்,  வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்து அதை கார்த்திக் தனது செல்போனிலும் பதிவு செய்து மிரட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த சில  நாட்களாக சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. 
இதுபற்றி சிறுவனிடம் தாய் கேட்டப்போது, டியூசனில் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி கூறியுள்ளான்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார், அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பள்ளி ஆசிரியர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 


Advertisement