பள்ளி மாணவர்களின் கோஷ்டி மோதல்! வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், ஆசிரியர்களும்!

பள்ளி மாணவர்களின் கோஷ்டி மோதல்! வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், ஆசிரியர்களும்!school students fight

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் காவல் நிலையம் அருகிலேயே கடுமையாக மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

fight

 திருக்குறுங்குடி காவல் நிலையத்தின் அருகே மாணவர்கள்மோதி கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பை சேர்ந்த மாணவர்களும் புத்தக பைகளை தூக்கி வீசி சண்டையிட்டுக் கொண்டனர். 

மாணவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவில் ரவுடிக் கும்பலைப்போல மாணவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோவால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.