தமிழகம்

நீரில் மூழ்கிய இளம்பெண்.! காப்பாற்ற சென்ற 17 வயது மாணவனுக்கு நொடிப்பொழுதில் காத்திருந்த பேரதிர்ச்சி.!

Summary:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீதாநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரஃபி. இவரது மகன் நிஷாரஹீப

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீதாநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரஃபி. இவரது மகன் நிஷாரஹீப். 17 வயது நிறைந்த இவர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நிஷாரஹீப் தனது  நண்பர்களுடன் சீத்தகாடு பகுதியில் உள்ள அமராவதி தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அனைவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது அங்கு ஆழமான பகுதியில் பெண் ஒருவர் நீரில் மூழ்கியபடி தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார். இந்த நிலையில் அவரை காப்பாற்ற எண்ணிய நிஷாரஹீப் விரைந்து சென்று அந்த பெண்ணை மேலே தூக்கிவிட்டு காப்பாற்றியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் அவரது கால்கள் சேற்றுப் பகுதியில் மாட்டிக்கொண்டது. இந்நிலையில் அவர் கால்களை எடுக்க முயற்சித்தபோது நீரில் மூழ்கினார்.

அவரது நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனே தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் நிஷாரஹீப்பை சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement