தமிழகம்

மிகவும் மோசமாக ஆசிரியர் கூறிய ஒத்த வார்த்தை.! மனம்நொந்து பள்ளி சிறுமி எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி!!

Summary:

school student commit suicide for tescher scolding

ராமேஸ்வரம் அருகேயுள்ள நடராஜபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் சிறுமி காளீஸ்வரி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், காளீஸ்வரி தன்னுடன் பயிலும் சில  மாணவிகளுடன் சேர்ந்து வங்கி கணக்கு துவங்க ராமேஸ்வரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றுவிட்டு சிறிது காலதாமதமாக பள்ளிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கு லேட்டாக வந்த மாணவிகளை அறிவியல் ஆசிரியை ஜலீலா என்பவர் மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். மேலும் அந்த ஆசிரியருடன் இணைந்து ஆங்கில ஆசிரியர் ஜெரோன் என்பவரும்  டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவோம், மாடு மேய்க்கவே லாயக்கு இல்லை என மாணவிகளை அவதூறாக திட்டியுள்ளார்.

  

இதனால், மனமுடைந்த மாணவி காளீஸ்வரி மாலை வீட்டிற்குச் சென்று எலிமருந்தை சாப்பிட்டு, படுத்துக்கொண்டு அளித்துக்கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். அப்பொழுது அவர் பள்ளியில் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். மேலும் தான் எலி மருந்து சாப்பிட்டதையும் கூறியுள்ளார்.  

இதை கேட்டஅதிர்ச்சியடைந்து உடனே மாணவியை  மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின்னர் அவர்கள் உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். பின்னர் அங்கு  கல்வி துறை அதிகாரிகள் விரைந்து  விசாரித்ததில் ஆசிரியர்கள் அவதூறாக பேசியது தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் இருவரையும்  பணியிடம் மாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து  அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement