
school leave for rain
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவக் காற்று முடிவடைந்த நிலையில் வரும் 17ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
இந்நிலையில் நேற்று இரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று திங்கள்கிழமை மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்.
தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழையால், சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஆனது. மேலும் சாலைகளில் மழை நீர் தேங்கி இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement