மீண்டும் கொட்டித்தீர்த்த கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்!

மீண்டும் கொட்டித்தீர்த்த கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்!


school leave for heavy rain


தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை  மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமான மழை பெய்துவருகிறது. 

இந்நிலையில் வெப்ப சலனம் காரணாமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

school leave

இந்தமழையானது டிசம்பர் -1 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தநிலையில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்துவருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக திருச்சி, அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு, இன்று மட்டும் விடுமுறை விடப்படுவதாக  மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.