
school girls suicide in school
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள மெய்யாத்தூர் பகுதியை சார்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி உமா. இந்த தம்பதியினருக்கு துர்கா தேவி என்னும் 13 வயதுடைய பெண் குழந்தை இருந்துள்ளார். இந்தநிலையில், துர்கா தேவி அந்த ஊர் அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
துர்கா தேவி படிப்பில் சிறந்து விளங்கியதாலும், அந்த மாணவியின் வீடு பள்ளிக்கு மிக அருகாமையில் இருந்ததாலும் பள்ளியின் சாவியை மாணவியிடம் பள்ளியின் தலைமையாசிரியர் வழங்கியுள்ளார். இந்தநிலையில், காலையில் விரைவாக பள்ளிக்கு வந்து பள்ளியை திறந்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த மாணவி. அதேபோல் நேற்று பள்ளிக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்ற மாணவி வீட்டிற்கு வரவில்லை.
இதனையடுத்து, பள்ளிக்கு வந்த மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது மாணவி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தலைமையாசிரியரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement