"அடுத்தடுத்து மயங்கிய மாணவிகள்..." அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்.!! கூலி தொழிலாளிகள் கைது.!!

திருச்சி அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் மீது போக்சோ வழக்குப் பதிந்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் மயக்கமடைந்த மாணவிகள்
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவை சேர்ந்த கிராமத்திலுள்ள 12 வயது மற்றும் 17 வயது மாணவிகள் 2 பேர் அங்குள்ள அரசு பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென 2 மாணவிகளும் மயக்கமடைந்திருக்கின்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளியின் ஆசிரியர்கள், மாணவிகள் இருவரையும் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாணவிகள் மாற்றப்பட்டனர்.
பெற்றோர் பரபரப்பு புகார்
இந்நிலையில் தங்களது குழந்தைகள் மயக்கமடைந்தது தொடர்பாக திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். அந்தப் புகாரில் தங்களது குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு.!! கல்லூரி மாணவி மீது பலாத்க்கார முயற்சி.!! நிர்வாக அதிகாரி தலைமறைவு.!!
போக்சோ வழக்கு
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் முசிறி தாலுகா மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜித்(22) மற்றும் கொத்தனார் வேலை செய்து வரும் கேசவன்(23) ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: "நீங்க வந்தா மட்டும் போதும் திமுக கதைய முடிச்சிடலாம்..." நாதக சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு.!!