அடிக்கடி மயங்கி விழுந்த 16 வயது சிறுமி! மருத்துவ பரிசோதனையில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.11 ஆம் வகுப்பு படித்து வரும் அவருக்கு சமீபகாலமாக தலைச்சுற்றல் மற்றும் வாந்தி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த நிலையில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள பங்கஜம் காலனியைச் சேர்ந்த அல்ஹஸன் என்ற கல்லூரி மாணவனுடன் சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமி மாடர்ன் உடையில் தான் எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட அந்த இளைஞன் அவரது புகைப்படங்களை வர்ணித்து கமெண்டுகளை அனுப்பி வந்துள்ளார்.

அதன் மூலம் அந்த இளைஞருடன் நட்புடன் பழகத் தொடங்கிய சிறுமி நாளடைவில் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.இந்நிலையில் ஒருகட்டத்தில் அந்த இளைஞன் சிறுமியிடம் அரைகுறை ஆடைகளுடன் படம் எடுத்து அனுப்பினால், நீ பாலிவுட் நடிகை போல இருப்பாய் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த சிறுமியும் உடனே தனது அரைகுறை படங்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை அறை ஒன்றிற்கு அழைத்த இளைஞன் அவருடன் அத்துமீறியுள்ளார்.இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி அவரை வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை வெளியே சொல்ல கூடாது எனவும் மிரட்டியுள்ளார் என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அந்த இளைஞனை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.