சதீஷும், ரமேஷும் சேர்ந்து செய்த செயலால் 5 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த பள்ளி மாணவி!

சதீஷும், ரமேஷும் சேர்ந்து செய்த செயலால் 5 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த பள்ளி மாணவி!



school-dead-after-5-days-of-rape-attempt

தருமபுரி அருகே பள்ளி மாணவியை இளைஞர்கள் இரண்டு பேர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது மாணவி படுகாயம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததால் பெற்றோர்கள் சோகத்தில் மூழ்கியள்ளனர். 

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே ஒரு மலை கிராமத்தை சேர்ந்தவர் கோமதி. இவர் அருகிலுள்ள பாப்பிரட்டிப்பட்டியில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் தீபாவளி விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார் கோமதி. கடந்த 5ஆம் தேதி காட்டுப் பகுதிக்கு சென்ற கோமதியை அதே பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் ரமேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். மாணவி கூச்சலிடவே அவளது வாயில் துணியை வைத்து அழுத்தி சத்தம் போடாமல் தடுத்துள்ளனர். அதையும் மீறி மாணவி கூச்சலிடவே அவர்கள் கோமதியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர்களுடன் நடந்த போராட்டத்தில் கோமதி பலத்த காயம் அடைந்துள்ளார்.

Tharmapuri Gomathi

இந்த தகவலை அறிந்த கோமதியின் பெற்றோர் கோமதியை தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் ஊர்க்காரர்களின் உதவியுடன் காவல் நிலையத்தில் சதீஷ் மற்றும் ரமேஷ் மீது புகார் அளித்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அவர்களை கைது செய்யவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் ஐந்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோமதி நேற்று மரணம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோமதியின் மிகுந்த சோகத்தில் உள்ளனர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கோமதி அடிக்கடி மயக்கம் வருகிறது என்று கூறியதாகவும் இதனால் தலையை ஸ்கேன் செய்து பார்த்தபோது தலையில் எதுவும் பிரச்சினை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tharmapuri Gomathi

இதனால் மாணவிக்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல் குளுக்கோஸ் மட்டும் ஏற்றியுள்ளனர். நேற்று திடீரென வாந்தி எடுத்த கோமதி மயக்கும் வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் மயக்கமடைந்த கோமதி திடீரென உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சரியாக சிகிச்சை அளிக்காததால் கோமதி மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகவும் இதற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என கோமதியின் பெறறற்றோர் புலம்புகின்றனர்.