#சற்றுமுன்: இந்த மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் கட்டாயம் செயல்படும் - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!



School college leave cancel in 4 districts

தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை காரணமாக கடலூர், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தாலும், காலையில் மழை என்பது சில இடங்களில் இல்லை.

வானம் கதிரவனை வரவேற்றதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் வழக்கம்போல செயல்படும். விடுமுறை கிடையாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மழையால் இன்று விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், ஆட்சியர்களின் அறிவிப்பு அவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.