எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த சசிகலா.! தொணடர்கள் மத்தியில் சசிகலா போட்டுடைத்த உண்மை.! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்.!

எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த சசிகலா.! தொணடர்கள் மத்தியில் சசிகலா போட்டுடைத்த உண்மை.! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்.!sasikala-talk-about-admk-QWMWJH

விழுப்புரம் மாவட்டத்தில், 2-வது நாளாக புரட்சிப்பயணம் மேற்க்கொண்ட சசிகலா. நேற்று வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். தொண்டர்களை சந்தித்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து திருச்சிற்றம்பலம் மூன்று முனை சந்திப்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, பல அடக்குமுறைகள் இருந்த போதும் அம்மாவும் நானும் சேர்ந்து கழகத்தை கட்டி காத்துள்ளோம். அம்மாவிடம் இருந்த என் நட்பு புனிதமானது. அம்மா என் மீது வைத்திருந்த அன்பு இந்த உலகத்தில் உள்ள யாரும் வைத்திருக்க முடியாது.

என்னை அம்மாவிடம் இருந்து பிரிக்க நிறையபேர் சூழ்ச்சிகளை செய்தார்கள். அதையெல்லாம் முறியடித்து சாதனை படைத்தது தொடர் வெற்றிகளை கண்ட கழகம் இன்று தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் கட்சிக்கு வலிமையான, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடய தலைமை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

எந்த திமுக கட்சிக்கு எதிராக நம் எம்ஜிஆர் கட்சி ஆரமித்தார்கலோ, அந்த திமுக ஆட்சியை கூட எதிர்க்க ஆளிலை. சுயநலத்திற்காக சிலர் கட்சியை கூறுபோட நினைக்கிறார்கள். இது தொண்டர்கள் மத்தியில் வெறுப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.