நடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா திடீர் சந்திப்பு.! என்ன காரணம் தெரியுமா.?

நடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா திடீர் சந்திப்பு.! என்ன காரணம் தெரியுமா.?


sasikala-meet-rajinikanth

நடிகர் ரஜினிகாந்தை சசிகலா இன்று சந்தித்து பேசினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். 

 சசிகலாவின் சிறைதண்டனைக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடங்கி பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சசிகலாவை மையப்படுத்தி அதிமுகவில் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சசிகலா இன்று சந்தித்து பேசினார். சமீபத்தில் உடல்நலக் குறைவால் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நலம் விசாரிப்பதற்கும், கலை உலகின் உயரிய விருதான தாதா சாகே பால்கே விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிகாந்தை நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்காகவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த் - சசிகலா இடையே ஒருமணி நேரத்திற்கும் மேல் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இருந்துள்ளார்.