தமிழகம்

என் மகன் இன்னும் இறக்கவில்லை! ஏழு பேர் உடலில் உயிராக இருக்கின்றான்! மகனுக்கு இறுதி சடங்கு செய்ய மறுத்த பெற்றோர்!

Summary:

Sarthkumar accident

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் - ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு சரத்குமார் என்று 21 வயது மகன் உள்ளான். சரத்குமார் சிவகங்கையில் உள்ள தனியார் வங்கி ஒன்று சரி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

அதனையடுத்து சரத்குமார் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரத்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து பெற்றோரின் உதவியுடன் சரத்குமாரின் உடல் உறுப்புகளை ஏழு நோயாளிகளுக்கு தானமாக வழங்கியுள்ளனர். இதனால் சரத்குமாரின் பெற்றோர் என் மகன் இன்னும் இறக்கவில்லை, ஏழு பேரின் உடலில் உயிருடன் தான் இருக்கிறான் என கூறி அவருக்கு இறுதி சடங்கு செய்ய மறுத்துள்ளனர். 


Advertisement