வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
சேலம் பெண்கள் சிறையில் பெண் வார்டன்கள் ஓரினசேர்க்கை சண்டை.. லெஸ்பியன் ஜோடிகளாக சிறையிலேயே உல்லாசம்..!
சிறையில் பாதுகாவலராக பணியாற்றி வரும் 2 அதிகாரிகள் ஓரினசேர்கைக்கு உள்ளாகி, பொஸசிவ் காரணமாக குடும்மிபிடி சண்டை நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
சேலத்தில் உள்ள பெண்கள் கிளைசிறையில் குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 45 க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் 3 பணி வேலைகள் அடிப்படையில் பாதுகாவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த சில வாரத்திற்கு முன்பு இவர்களிடையே கோஷ்டி மோதல் வெடித்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெண் பாதுகாவலர்களுக்கு இடையே இருந்த ஓரினசேர்க்கை லெஸ்பியன் தொடர்பு காரணமாக அடிதடி நடந்தது அம்பலமாகியுள்ளது.
இங்கு விவாகரத்தான பெண் பாதுகாவலரும், கணவரை பிரிந்த பெண் பாதுகாவலரும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் ஓரினசேர்க்கை உல்லாசத்திற்கு வழிவகை செய்துள்ளது. இதற்கிடையில் விவாகரத்தான பாதுகாவலர் மற்றொரு பாதுகாவலருடன் நெருக்கத்தை ஏற்படுத்தியதால், அது கணவரை பிரிந்த பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் நீ என்னுடன் தான் பழக வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்க, அதனை கண்டுகொள்ளாத பெண்மணி புதிய ஜோடியுடன் கைகோர்த்துள்ளார். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே சிறைக்குள் வாக்குவாதம் எழுந்துகொள்ள, அது கைகலப்பாக மாறி இருவரும் குடும்மிபிடி சண்டையிட்டுள்ளனர். இருவரும் சிறை வளாகத்திலேயே உறவு வைத்ததாகவும் கூறப்படுகிறது.