4 விதமாக சொன்ன அந்த 4 பேர்.. மனைவியை சரமாரியாக நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவன்.. தாயை தேடி கதறிய பிஞ்சுகள்.!

4 விதமாக சொன்ன அந்த 4 பேர்.. மனைவியை சரமாரியாக நடுரோட்டில் குத்திக்கொன்ற கணவன்.. தாயை தேடி கதறிய பிஞ்சுகள்.!


Salem WIfe Killed by Husband due to Affair Doubts

சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன்கோவில் தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி (வயது 35). இவரின் மனைவி தமிழ்செல்வி (வயது 28). தம்பதிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் 8 வயது மற்றும் 3 வயதுடைய 2 மகன்கள் இருக்கின்றனர். 

தமிழ்செல்வி அஸ்தம்பட்டி பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த நிலையில், மாலை நேரத்தில் கடைக்கு வந்த மூர்த்தி தனது 3 வயது மகனின் கண்முன்னே தமிழ்செல்வியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கழுத்து மற்றும் நெஞ்சில் கத்திக்குத்து காயத்துடன் பெண்மணி கதறிய நிலையில், அங்கிருந்த அழகாபுரம் மகளிர் காவல் நிலைய அதிகாரி மற்றும் வியாபாரிகள் மூர்த்தியை மடக்கி பிடித்துள்ளனர். 

தமிழ்செல்வியை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தமிழ்செல்வி கணவரை 7 மாதங்களுக்கு முன்னதாக பிரிந்த நிலையில், மூர்த்தி 2 ஆவது மகனை அழைத்துக்கொண்டு மும்பை சென்றுள்ளார். அங்கு தனது சகோதரருடன் வேலைபார்த்து வந்துள்ளார். 

கடந்த வாரத்தில் ஊருக்கு வந்திருக்கையில் தமிழ்செல்வி 2 ஆவது மகனையும் அழைத்து சென்றுவிட்ட நிலையில், தமிழ்செல்விக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக அக்கம் பக்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி மதுபோதையில் மனைவியை கொலை செய்திருக்கிறார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, மூர்த்தியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.