நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
காதல் தகராறில், இளைஞரின் தந்தை அடித்தே கொலை: வாழப்பாடியில் பயங்கரம்.. அதிமுக நிர்வாகிகள் வெறிச்செயல்.!

தனது மகளை காதலித்த நபரின் தந்தையை கொலை செய்த உறவினர்களில் இருவர் கைது செய்யப்பட, இருவர் விசாரணை வளையத்தில் இருக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி, தென்னம்பிள்ளையூர் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 50). இவரின் மகன் பிரசாந்த் (வயது 26). பிஇ பட்டதாரியான இவர், வேலை தேடி வருகிறார். இதே பகுதியைச் சார்ந்த நபர் முருகேசன். இவரின் 18 வயது மகள் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள்.
இதற்கிடையில், முருகேசனின் 18 வயது மகளை பிரசாந்த் காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் இருதரப்புக்கும் தெரிய வந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வாழப்பாடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இருதரப்பையும் பேசி சமாதானம் செய்து அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த எட்டாம் தேதி காதல் விவகாரம் குறித்து இரு தரப்புக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயம் முருகேசனின் உறவினர்களான அதிமுக கிளை செயலாளர் சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி தமிழரசி, முத்தம்மாள் ஆகியோர் சேர்ந்து குணசேகரன் மற்றும் பிரசாந்த் ஆகியோரை கட்டையால் கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், குணசேகரன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தநிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முருகேசன் மற்றும் சிவகுமார் ஆகியோரை கைது செய்தனர். முத்தம்மாள், தமிழரசியிடம் விசாரணை நடந்து வருகிறது.