நிலத்தகராறில் கூலிப்படை ஏவி பெண் கொலை?.. அதிமுக நிர்வாகி பரபரப்பு செயல்.. காவல்துறை வலைவீச்சு.!

நிலத்தகராறில் கூலிப்படை ஏவி பெண் கொலை?.. அதிமுக நிர்வாகி பரபரப்பு செயல்.. காவல்துறை வலைவீச்சு.!



Salem Thalaivasal Woman Murder by 10 Man Gang due to Land Dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல், தென்குமரை கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடாசலம். இவர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இதே கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 49). ராமசாமிக்கு சொந்தமாக இருந்த ஆறரை ஏக்கர் நிலத்தை வெங்கடாசலம் வாங்க முடிவு செய்துள்ளார். 

இந்த நிலத்தை விற்பனை செய்ய ரூ.82 இலட்சம் பேரம் பேசப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ரூ.21 இலட்சம் முன்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இறுதியில், பத்திரப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன்னதாக ராமசாமி முன்தொகை ரூ.21 இலட்சத்தை மீண்டும் வெங்கடாசலத்திடம் கொடுத்து, பத்திரப்பதிவு செய்ய மறுத்துள்ளார். 

இதனால் இருதரப்பு தகராறு இருந்து வந்த நிலையில், ராமசாமிக்கு சொந்தமான மக்காசோள பயிர்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக அவர் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்துள்ளனர். 

Salem

நேற்று முன்தினத்தில், இரவு ராமசாமி மற்றும் அவரின் அக்காவான ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் பூவாயி (வயது 66), குடும்பத்தினர் வீட்டின் முன்பு பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அந்த சமயத்தில், அங்கு வந்த 10 பேர் கும்பல் ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவத்தில் ராமசாமி மற்றும் பூவாயி படுகாயம் அடைந்த நிலையில், வீட்டையும் சேதப்படுத்தி கும்பல் தப்பி சென்றுள்ளது. படுகாயமடைந்து உயிருக்கு துடித்தவர்களை மீட்ட அக்கம் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க, பூவாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்திடம் விசாரணை நடந்த சென்ற நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். இதனால் வெங்கடாசலத்தின் மகன் மற்றும் அவரின் உறவினர்கள் 7 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.