BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சிறையில் கஞ்சா, செல்போன் விற்க முயற்சி; காவலர் பணியிடைநீக்கம்.!
சேலம் மாவட்ட மத்திய சிறைச்சாலையில், பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடைய 800 க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வப்போது சிறையில் காவல்துறையினர் சார்பில் சோதனை நடத்தப்படும். இதனிடையே, சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா விநியோகம் செய்யப்படுகிறது, கைதிகள் போனில் பேசுகிறார்கள் என புகார் எழுந்தது.
இந்த விஷயம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடத்தி வந்த நிலையில், அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக 140 காவல்துறையினர் சிறைக்குள் நுழைந்து அதிர்ச்சி சோதனை நடத்தினர். சோதனையில் எந்த பொருளும் சிக்கவில்லை.
இதையும் படிங்க: வேனில் வாக்குவாதம்.. சிறுவனின் ஆத்திரத்தால் உயிரே போச்சு.. சேலத்தில் நடந்த சோகம்.!
சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன் மற்றும் கஞ்சா விற்ற புகாரில், அங்கு பணியாற்றும் முதல்நிலை காவலர் சரவணகுமாரை (35) தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் வினோத் நடவடிக்கை.#TNPolice pic.twitter.com/8Zl0NvtxWv
— எம். சின்னத்தம்பி (@cinnattampi) February 18, 2025
இந்நிலையில், சேலம் மத்திய சிறைக்குள் கஞ்சா விற்பனையை செய்ய முயன்றதாகவும், கைதிகளுக்கு செல்போன் வழங்கியதாகவும், சிறையில் பணியாற்றி வரும் முதல்நிலை காவல் அதிகாரி சரவணகுமார் (வயது 35) பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: 14 வயது சிறுவன் அடித்துக்கொலை; பள்ளி பேருந்தில் நடந்த சண்டையில் விபரீதம்.! சேலத்தில் பயங்கரம்.!