கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவர்கள் மீது காவல் நிலையத்திலேயே கொடூர தாக்குதல்; பகீர் வீடியோ வைரல்..!

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவர்கள் மீது காவல் நிலையத்திலேயே கொடூர தாக்குதல்; பகீர் வீடியோ வைரல்..!


Salem Police Station gang Attack 

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி கிராமத்தில் கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பல்வேறு குற்றங்கள் நடந்து வந்ததாக தெரியவருகிறது. 

இதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில் புகாராக அளித்து இருக்கிறார். இந்த தகவலை அறிந்த சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடும் கும்பல் புகார் அளித்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது. 

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் அளித்த நபர்கள் மீது காவல்நிலையத்தில் வைத்தே குண்டர்கள் தாக்கும் கொடூர காட்சி..

Posted by Jeyakumar on Wednesday, 21 June 2023

இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

செய்தி வீடியோவின் அடிப்படையில் பதிவிடப்பட்டுள்ளது.