தமிழகம்

என்ன பணியாரம் இது?, டேஸ்டாவே இல்ல...! குடிகார கணவனின் பாசம் கழுத்தை நெரித்ததால் பறிபோன மனைவி உயிர்.!

Summary:

என்ன பணியாரம் இது?, டேஸ்டாவே இல்ல...! குடிகார கணவனின் பாசம் கழுத்தை நெரித்ததால் பறிபோன மனைவி உயிர்.!

மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவன், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி பள்ளர் தெருவில் வசித்து வருபவர் லட்சுமணன் (வயது 30). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சரண்யா (வயது 26). இவர்கள் இருவருக்கும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். லட்சுமணன் மதுபானம் அருந்தும் பழக்கத்தை வைத்திருந்ததால், தினமும் மதுபானம் அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவிலும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த லட்சுமணன், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், இரவு 10 மணிக்கு மேல் ஈரோட்டில் இருக்கும் சரண்யாவின் சகோதரர் நந்தகுமாருக்கு தொடர்பு கொண்ட லட்சுமணன், உனது அக்கா திடீரென இறந்துவிட்டார் எனக்கூறி அழைப்பை துண்டித்துள்ளார். 

இதனால் பதறிப்போன நந்தகுமார் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கஞ்சநாயக்கன்பட்டிக்கு வருகை தந்துள்ளனர். அப்போது, சரண்யா வீட்டில் பிணமாக இருந்த நிலையில், நெற்றி பகுதியில் காயம் இருந்துள்ளது. மேலும், கை-கால்களில் இரத்தகாயமும் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த நந்தகுமார், அக்காவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் லட்சுமணனை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், சம்பவத்தன்று மதுபோதையில் வந்த லட்சுமணன், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கடையில் பணியாரம் வாங்கி வந்துள்ளார். இதனை சாப்பிட்ட சரண்யா, பணியாரம் ருசியாக இல்லை என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

ஆத்திரமடைந்த லட்சுமணன் மனைவி சரண்யாவை அடித்து கீழே தள்ளி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மனைவி இறந்துவிட்டார் என்பதை தாமதமாக உணர்ந்த லட்சுமணன், அவரது சகோதரருக்கு தொடர்பு கொண்டு கூறியுள்ளார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, மனைவியை கொலை செய்த லட்சுமணனை காவல் துறையினர் கைது செய்தனர். 


Advertisement