16 வயது சிறுமியுடன் காதல் திருமணம், குழந்தைப்பேறு.. சேலத்தில் வடமாநில தொழிலாளியி விசாரணை.!

16 வயது சிறுமியுடன் காதல் திருமணம், குழந்தைப்பேறு.. சேலத்தில் வடமாநில தொழிலாளியி விசாரணை.!


Salem Jharkhand Couple Under Age Marriage Girl Delivery Female Baby

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி, மேட்டுப்பட்டி பகுதியில் தங்கியிருக்கும் ஜார்கண்ட், பீகார், உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வடஇந்திய தொழிலாளர்கள் கட்டிட வேலை, தோட்டவேலை, மண்பாண்ட வேலை, பொம்மை விற்பனை, ஓட்டல் வேலை போன்றவற்றை செய்து வருகின்றனர். 

வடமாநிலங்களில் பெரும்பாலும் 18 வயதுக்கு கீழுள்ள சிறுமிகளுக்கு கட்டாய அல்லது காதல் திருமணம் நடப்பதும், அவர்கள் குடும்பத்துடன் பிழைப்புக்காக இங்கு வருவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இதனைப்போல, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதியான புருஷா முண்டா - விகாஷி (வயது 16) தம்பதிகள் வாழப்பாடி அருகே தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். 

Salem

இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், விகாஷி நிறைமாத கர்ப்பிணியாக தற்போது இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்படவே, அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. 

தாயும் - சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், கணவர் புருஷா முண்டா தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து வருகிறார். இந்நிலையில், மருத்துவர்களுக்கு விகாஷியின் வயது 16 என்பது தெரியவரவே, அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் புருஷா முண்டாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.