தமிழகம்

அரசியல் புள்ளிகளை சுட்டுக்கொல்ல வடமாநில திருடர்கள் திட்டம்?.. சேலத்தில் கைதான 2 பேர்.. பரபரப்பு தகவல்.!

Summary:

அரசியல் புள்ளிகளை சுட்டுக்கொல்ல வடமாநில திருடர்கள் திட்டம்?.. சேலத்தில் கைதான 2 பேர்.. பரபரப்பு தகவல்.!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி, முத்தம்பட்டி இரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரின் மனைவி சாந்தா. இவர் வேப்பிலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சாந்தா கடந்த 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் கொடியேற்ற பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார். 

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், சாந்தாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து சென்றனர். இதனைப்போல, இதே கும்பல் ஏத்தாப்பூர் பெரியகிருஷ்ணாபுரம் ஆத்தூர் - சேலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற மோகன் குமார் - மோகனா தம்பதியின் தங்க நகையையும் பறித்து சென்றுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார். கொள்ளையர்களுக்கு அதிகாரிகள் வலைவீசிய நிலையில், வாழப்பாடி பகுதியில் வாகன தணிக்கையில் 2 வாலிபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் முன்னுக்கு பின்னர் முரணாக பதில் அளித்த நிலையில், அவர்களை சோதனை செய்கையில் நாட்டு துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்கையில் இருவரும் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த புஸ்ப்பெத்திர பிங்கி (வயது 22), சதாம் ராஜா (வயது 32) என்பது தெரியவந்தது.  

இருவரும் வாழப்பாடி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நிலையில், திருட்டுக்கு இருசக்கர வாகனத்தையும் திருப்பூரில் வைத்து திருடியுள்ளனர். இருவரிடம் இருந்தும் ஒரு நாட்டு துப்பாக்கி, 5 தோட்டா, 11 சவரன் நகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. இவர்கள் தொழிலதிபர்கள், அரசியல் வாதிகளை சுட்டுக்கொலை செய்ய நோட்டமிட்டனரா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. 


Advertisement