பிரியாணி தால்சாவில் புழு.. தட்டி கேட்ட மாணவர்கள் கைது.. நீதிமன்றத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்.!

பிரியாணி தால்சாவில் புழு.. தட்டி கேட்ட மாணவர்கள் கைது.. நீதிமன்றத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்.!


salem-biryani-shop-case-in-court-sudden-twist

பிரபல பிரியாணி கடையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சாப்பிட்ட உணவில், புழு இருந்ததாக புகார் அளித்த இளைஞர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் எச்சரிக்கையால் விடுவித்துள்ளனர்.

சேலத்தில் உள்ள ஐந்து ரோடு அருகே பிரபல பிரியாணி கடை ஒன்று உள்ளது. கடந்த 25 ஆம் தேதி அங்கு தனியார் கல்லூரி மாணவர்கள் பிரியாணி சாப்பிட வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் சாப்பிட்ட பிரியாணிக்கு சாம்பாராக வழங்கப்படும் தால்சாவில், புழு இருப்பதை அறிந்த மாணவர்கள் கடை ஊழியர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், சிறிதும் அதனை கண்டுகொள்ளாத கடை ஊழியர்கள் மற்ற வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி இருக்கின்றனர். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் கடையின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் உணவுப்பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, அதிகாரிகள் சோதனைக்காக உணவினை எடுத்து சென்றனர்.

biryani

இதற்கிடையில், பணம் பறிப்பதற்காக பிரியாணி கடையை பற்றி பொய்யான புகாரை கூறுவதாக இளைஞர்கள் உட்பட உணவில் புழு உள்ளதை கூறிய மூன்று மருத்துவர்கள் என ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, திடீர் டிவிஸ்ட்டாக உணவில் புழு இருந்ததை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

தொடர்ந்து பிரியாணி கடையின் மீது 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் மாணவர்களை கைது செய்த போலீசாரை நீதிபதி கண்டித்து எச்சரித்துள்ளார்.