அக்காவை வழியனுப்பிவைத்து உடல்நசுங்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை.. சேலத்தில் நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.!

அக்காவை வழியனுப்பிவைத்து உடல்நசுங்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை.. சேலத்தில் நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.!


salem-attur-child-girl-died-bus-tyre

ஆத்தூர் அருகே ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை தனது அக்காவை பேருந்துக்கு வழியனுப்பிவைத்த அடுத்த நொடியே, அதே பள்ளியின் பேருந்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல் லத்துவாடி கிரமத்தில் வசித்து வருபவர் காசி. இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சுதா. தம்பதிகளுக்கு வேதாசினி (வயது 4), ஒன்றரை வயதுடைய பவனிகா ஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர். வேதாசினி வீரகனூரில் இருக்கும் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வருகிறார். 

இன்று காலையில் சுதா தனது மகள் பவனிகா ஸ்ரீயை வீட்டில் விட்டுவிட்டு, மூத்த மகள் வேதாசினியை பேருந்தில் ஏற்றிவிட வீட்டின் அருகேயுள்ள நெடுஞ்சாலைக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த ஒன்றரை வயதுடைய குழந்தை தாய்க்கு பின்னால் அமைதியாக ஓடி வந்ததை யாரும் கவனிக்கவில்லை. 

Salem

தனது அக்கா பேருந்தில் ஏறுவதை பார்த்து சிறுமி மகிழ்ந்துகொண்டு இருந்த நிலையில், கீழே ஒன்றரை வயதுடைய பவனிகா இருந்ததை யாருமே கவனிக்கவில்லை. இதனால் பேருந்தை ஓட்டுநர் இயக்கிய போது, பேருந்து சக்கரம் அருகே இருந்த சிறுமியின் உடல் மீது பேருந்து ஏறி அவர் பரிதாபமாக பலியாகினர். 

இதனைக்கண்டு பதறிப்போன தாய் துக்கம் தாளாது கதறியழுது மயக்கம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் பேருந்தை சிறைபிடிக்கவே, காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த விரகனூர் காவல் துறையினர் பவானிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.