ரூ.288.38 கோடி பணம் பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது... அதிர்ச்சி தகவல்...!!

ரூ.288.38 கோடி பணம் பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது... அதிர்ச்சி தகவல்...!!


rs28838-crore-money-stolen-from-the-bank-account-of-com

பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து ஒரு வருடத்தில் 288 கோடிக்கு அதிகமான பணம் திருடப்பட்டு உள்ளது.

ஆன்லைன் மூலமாக பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக பணத்தை சுருட்டும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. 

கடந்த ஓரு வருடத்தில் பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.288.38 கோடி பணம் திருடப்பட்டு உள்ளதாக சைபர் கிரைம் காவல்துறையினர் கூறியுள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது, ஆன்லைன் மூலமாக தமிழகத்தில் பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

ஒரு வருடத்தில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து 288 கோடைக்கும் அதிகமான பணம் திருடப்பட்டுள்ளது. பொது மக்களின் புகாரின் அடிப்படையில் 106 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.27 கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கடந்த மூன்று மாதத்தில் ஆன்லைன் மூலமாக 12 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து 67 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளது. இதில் ரூ.49 கோடி முடக்கப்பட்டு உள்ளது. ரூ.6 கோடி பணம் மூன்று மாதத்தில் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பண மோசடி தொடர்பாக 29 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளனர். ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் சிம்கார்டுகள் தடை செய்யப்பட்டு வருகிறது

இதன்படி 27 ஆயிரத்து 905 சிம் கார்டுகளை தடைசெய்ய மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதில் 22 ஆயிரத்து 240 சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் தேவையில்லாத நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை கண்டு கொள்ளாமல் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.