ரூ.500 கள்ளநோட்டுகள் ஊடுருவல்; மக்களே கவனமாக இருங்கள்.. அலட்சியத்தால் ஏமார்ந்து விடவேண்டாம்..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பழைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து, ரூ.1000 நோட்டை இரத்து செய்து ரூ.2000 & ரூ.500 புதிய நோட்டுகளை வெளியிட்டார். புழக்கத்தில் இருக்கும் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 நாடுகளும் மாற்றப்பட்டன.
கள்ளநோட்டுகளின் புழக்கத்தை குறைக்க மத்திய அரசு அன்று மிகப்பெரிய முடிவை எடுத்தாலும், புதிய நோட்டுகளிலும் கள்ளநோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்படுகின்றன. இந்த நிலையில், விருதுநகரில் ரூ.500 கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சித்த பெண்மணி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து மொத்தமாக ரூ.54,500 கள்ளநோட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணை நடத்திவரும் நிலையில், ரூ.500 பண விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.