இப்படி ஆயிடுச்சே! கடைசியாக சமையலில் அசத்தி சிரிப்போடு வெளியேறிய ரோபோ சங்கர்! வைரல் வீடியோ....
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் காணொளி தற்போது இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர், சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்றும், மூச்சுத்திணறல் காரணமாக ஐசியூவிற்கு மாற்றப்பட்ட அவர், பின்னர் உயிரிழந்தார். இதனால் சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் அவரது வீட்டுக்கு வந்து இரங்கல் தெரிவித்தனர்.
டாப் குக் டூப் குக்கு நிகழ்ச்சி
ரோபோ சங்கர் கடைசியாக பங்கேற்ற டாப் குக் டூப் குக்கு நிகழ்ச்சியில், சமையல் திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக நடிகர் அஜித்தின் பேவரைட் பிரியாணியை செய்து அனைவரையும் கவர்ந்தார். மூன்று வாரங்கள் சிறப்பாகச் சமைத்த அவர், நான்காவது வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மரணம்! திரையுலகமே கவலையில்.....
சிரித்தபடி வெளியேறிய காட்சி
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது எந்த சோகமும் காட்டாமல், சிரித்தபடி விசில் அடித்து வெளியேறிய ரோபோ சங்கரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் இந்தக் காணொளியை பகிர்ந்து, அவரின் சந்தோஷமான மனநிலையை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
ரோபோ சங்கரின் கடைசி தருணங்களை பதிவு செய்த இந்தக் காட்சி, அவரின் வாழ்க்கை அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: எனக்கு பெரும் துயரம்! ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி!