பிரபல சின்னத்திரை ஜோடி வீட்டில் திருட்டு... காவல்துறை பரபரப்பு விசாரணை.!



robbers-stole-a-lakh-worth-possession-from-famous-celeb

தமிழ் சின்னத்திரை சீரியல் களில் பிரபலமாக விளங்கி வரும் ஜோடி லதா ராவ் மற்றும் ராஜ்கமல். இவர்கள் இருவரும் பல சின்னத்திரை தொடர்களிலும் சினிமா திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர்கள்.

 ராஜ்கமல்  இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இவர் சஹானா என்ற டிவி தொடரிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இவரது மனைவி லதாராவ்  30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தில்லாலங்கடி திரைப்படத்தில்  வடிவேலுவுக்கு மனைவியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

tamilnadu

ராஜ்கமல் மற்றும் லதா தம்பதியினர் சென்னை மதுரவாயலில் ஆர்கே ஷூட்டிங் ஹவுஸ் என்ற பெயரில்  வீடு ஒன்றை கட்டினார். இந்த வீட்டில் சினிமா சூட்டிங் மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் நடத்துவதற்காக  வாடகைக்கு விடப்படுகிறது.

tamilnadu

இந்நிலையில் இந்த  வீட்டில் திருட்டு  நடந்திருப்பதாக காவல்துறையில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் படி வீட்டில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான டிவி திருடப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர்  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.