ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி; போலீஸ் ரோந்து வாகன ஒலியை கேட்டு ஓட்டம்... காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி; போலீஸ் ரோந்து வாகன ஒலியை கேட்டு ஓட்டம்... காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!


Robbers attempted to loot an ATM machine in Kancheepuram by breaking it with a rock.

காஞ்சிபுரத்தில் உள்ள ஏடிஎம் மிஷினை கடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த கொள்ளையர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா அருகே ராஜம்பேட்டையில், காஞ்சிபுரம் - வாலாஜா சாலையில் தனியார் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில், வெள்ளையர்கள் இன்று அதிகாலை புகுந்து கடப்பாறை கொண்டு ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். 

ஏடிஎம் மிஷினை கொள்ளையர்கள் கடப்பாறை வைத்து உடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காவல்துறையினரின் ரோந்து வாகனம் சைரன் ஒலி எழுப்பிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.

காவல்துறையினரின் ரோந்து வாகனம் வருவதை அறிந்த கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பியோட்டினர். ரோந்து பணியின் போது ஏடிஎம் மையம் அருகே வந்த காவல்துறையினர், ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். 

இதைத் தொடர்ந்து கூடுதல் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். காவல்துறையினர் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.