நெஞ்சை பதைப்பதைக்கும் துயர சம்பவம்...பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண் மீது லாரி மோதி உயிரிழப்பு!!Road accident young girl died in kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் அன்னை இந்திரா காந்தி சாலை பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. இவர் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் உள்ள நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனது மிதிவண்டியில் வீடு திரும்பி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கனரக லாரி ஒன்று வெற்றிச்செல்வி மீது மோதியது. லாரி சக்கரத்தில் வெற்றிச்செல்வியின் தலைமாட்டி கொண்டு சுமார் 10 மீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளது.இதனால் அவரது தலையின் ஒருபகுதி முழுவதும் சிதைந்து சம்பவ இடத்திலேயே வெற்றிச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். 

kanchipuram

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் விரைந்து வந்து வெற்றி செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.