பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சகோதரர்களுக்கு நேர்ந்த சம்பவம்.. கதறும் குடும்பத்தினர்.!

பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சகோதரர்களுக்கு நேர்ந்த சம்பவம்.. கதறும் குடும்பத்தினர்.!


Road accident school student death in Cuddalore

கடலூர் அருகே உள்ள வெங்கடாம்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலன். இவருக்கு நித்திஷ் மற்றும் ஹரி பிரசாத் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர்.

School student death

இந்த நிலையில் சம்பவத்தன்று அண்ணன், தம்பி இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போதே அதிவேகமாக வந்த பேங்க் மாணவர்களின் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஹரி பிரசாத்தை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஹரி பிரசாத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

School student death

மேலும் இந்த விபத்தில் லேசான காயத்துடன் உயிர் தப்பிய நித்திஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.