தமிழகம்

அசுர வேகத்தில் வந்த 2 பைக்குகள்..! நேருக்கு நேர் மோதி நொறுங்கிய கோரம்! 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்!

Summary:

Road accident at madhurai

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே ராஜபாளையம் மெயின் ரோட்டில் எதிர் எதிர் திசையில் வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஓன்று மோதிக்கொண்டதில் மூன்று பேர் சம்பவ இடத்திலையே உயிர் இழக்க, ஒருவரை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்தில் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த காவலர் கார்த்திக்கை செல்வன் (33) என்பவரும், போடிநாயக்கனூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பெருமாள் சாமி என்பவரின் மகன் எத்தனராஜ் ஜெயந்த் (21), மற்றும்  ஜெயராம பாண்டியன் மகன் கேசவன் (21) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

கார்த்திகை செல்வனுடன் வந்த ஜெயபாண்டியன் என்பவரை சிகிச்சையாக மருத்துவமணையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு இருசக்கர வாகனங்களும் மிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement