14 மாவட்டங்களில் அனல்பறக்க வாட்டி வதைக்கும் வெயில்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

14 மாவட்டங்களில் அனல்பறக்க வாட்டி வதைக்கும் வெயில்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



RMC Announce 14 District Yellow Alert for Heatwave  

 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கமானது கோடையின் காரணமாக கடுமையாக அதிகரித்து இருக்கிறது. இதனால் நண்பகல் வேளைகளில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி வருகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கத்தினால் பலரும் அம்மை, உடல் சூடு அதிகரிப்பு போன்றவை ஒவ்வாமை காரணமாக அவதிப்பட்டு இருந்தனர். தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையும் விடுத்தது இருந்தது. 

இந்நிலையில், இன்று வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் இம்மவட்டங்களில் இருப்போர் நண்பகல் வேளையில் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருப்பது நல்லது. அவசியம் இருப்பின் வெளியே வருவோர் உடல் சூடு குறையும் வகையில் இயற்கை பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது நல்லது.