62 வயதில் காதல் மனைவியை கரம் பிடித்த போதகர்... உறவினர்களின் செயலால் அதிர்ச்சி... போலீசார் விசாரணை!!

62 வயதில் காதல் மனைவியை கரம் பிடித்த போதகர்... உறவினர்களின் செயலால் அதிர்ச்சி... போலீசார் விசாரணை!!


relatives-house-arrest-the-pastor-wife-in-kulatchel

குளச்சல் அருகே உள்ள பருத்தி விளை பகுதியை சேர்ந்தவர் 62 வயதான நபர் ஒருவர். திருமணம் ஆகாத இவர் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில் வீடு விடாக சென்று மத சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அந்த நபரின் தாயார் இறந்துள்ளார்.

அதன்பிறகு தனியாக வசித்த அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதனையடுத்து அந்த பெண்ணை தனது ஊருக்கு அழைத்து வந்து திருமணம் செய்துள்ளார் 62 வயதான அந்த நபர்.

ஆனால் வயது கடந்த இவர்களின் திருமணத்திற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் போதகர் வீட்டை விட்டு வெளியே சென்ற நேரம் பார்த்து இந்தோனேசியா பெண்ணை வீட்டிற்கு வைத்து பூட்டி உள்ளனர் உறவினர்கள்.

மேலும் வீடு திரும்பிய போதகரையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து போதகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் உறவினர்களிடம் வெகு நேரமாக பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து வீட்டின் கதவை திறந்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.