நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாட நினைத்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு நடுரோட்டில் நிகழ்ந்த சோகம்.!
திருப்பதி உப்பங்கி ஹரிஜனவாடா பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரய்யா - புஷ்பவதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் இளைய மகன் பிரசன்னகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிரசன்னகுமார் தனது நண்பர்களான பவன்குமார் மற்றும் பாலாஜி உள்ளிட்ட 8 பேருடன் தனது பிறந்தநாளை கொண்டாட நினைத்துள்ளார். அதனால் திருப்பதி ரேணிகுண்டா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.அங்கு அனைவரும் மது அருந்தி விட்டு பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
பின்னர் மாலை 6 மணிக்கு பவன்குமார் மற்றும் பாலாஜி உள்ளிட்ட 8 பேரும் ஹோட்டலிருந்து வெளியே சென்று விட்டு இரவு 9 மணிக்கு ஹோட்டல் வாசலில் நின்று கொண்டு பிரசன்னகுமாரை வெளியே வருமாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.
அதனையடுத்து வெளியே வந்த பிரசன்னகுமாரை பவன்குமார் மற்றும் பாலாஜி உள்ளிட்ட 8 பேரும் தான் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் பீர் பாட்டில்களால் பிரசன்ன குமாரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதில் பிரசன்னகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.