கிலோ 60 ரூ..! ரேஷனில் தொடங்கிய தக்காளி வியாபாரம்.!

கிலோ 60 ரூ..! ரேஷனில் தொடங்கிய தக்காளி வியாபாரம்.!



ration shops start to sell tomato for rs. 60 per kg

க்காளி விலை உயர்வை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்;

சென்னையில், நாளை முதல் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். விரைவில் தக்காளி மற்ற மாவட்டங்களிலும் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும். மேலும் நியாய விலை கடைகளில் விற்கப்படும் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கொள்முதல் செய்வதை அதிகரிதிருக்கிறோம். மேலும் பத்து நாட்களுக்கு தக்காளியின் விலை குறைய வாய்ப்பில்லை. விவசாயிகளிடம் இருந்து தக்காளி நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில்,  இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை  தொடங்கப்பட்டுள்ளது. முதலில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தொடங்கபட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 82 ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பப்பட்டு வருகிறது என்று தகவல். மேலும்,  தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை என்று பிரித்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூபாய் 60-க்கு விற்பனை. முன்னதாக வருகின்ற 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தக்காளி விற்கப்படும். ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே விற்கப்படும். மேலும், இதேபோல் ஒவ்வொரு கடையிலும் 50 கிலோவில் இருந்து 100 கிலோ வரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ரேஷன் கடைகளில் தக்காளி பெற குடும்ப அட்டையை காண்பிக்க அவசியமில்லை எனவும், மக்கள் அருகில் உள்ள தக்காளி விற்கப்படும் எந்த ரேஷன் கடைக்கும் சென்று வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.