கவலையை விடுங்க... தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தங்கம் விற்பனை..? பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
தங்கம், வெள்ளி விலை உயர்வால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு தீர்வாக, ரேஷன் கடைகள் வழியாக ஆபரணங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்ற ரேஷன் கடை கோரிக்கை தமிழகத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட நலனை மையமாகக் கொண்ட இந்த முன்மொழிவு தற்போது பரவலாக பேசப்படுகிறது.
முதல்வரிடம் கோரிக்கை மனு
ஏழை, எளியோர் மற்றும் நடுத்தர மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் லிங்கபெருமாள், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் இதுகுறித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை அரசு விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்கள்
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், சாமானிய மக்கள் ஆபரணங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசு தலையிட்டு தங்கம் வெள்ளி விற்பனை முறையை ரேஷன் கடைகள் வழியாக அமல்படுத்தினால், நடுத்தர மற்றும் விளிம்புநிலை மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு..! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
2025-ல் பேசப்படும் புதிய யோசனை
இந்த கோரிக்கையின் முக்கிய நோக்கம், பொதுமக்களின் அடிப்படை தேவைகளையும் பொருளாதார சுமையையும் சமநிலைப்படுத்துவதாகும். குறிப்பாக திருமணம் மற்றும் அவசர தேவைகளுக்கு ஆபரணங்கள் அவசியமாக இருப்பதால், அரசு முன்வரும் பட்சத்தில் இது சமூக நலத் திட்டமாக மாறும் என ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் இந்த 2025 விவாதம் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது. அரசு இதை பரிசீலித்து முடிவு எடுப்பதா என்ற எதிர்பார்ப்பு தற்போது மக்களிடையே அதிகரித்துள்ளது.