காப்புக்கட்டில் இளம்பெண் சடலம்.. திருமணத்திற்கு பின் முன்னாள் காதலனை சந்திக்கச்சென்றபோது பயங்கரம்.!

காப்புக்கட்டில் இளம்பெண் சடலம்.. திருமணத்திற்கு பின் முன்னாள் காதலனை சந்திக்கச்சென்றபோது பயங்கரம்.!


Ranipet Walajapet Reserve Forest Woman Murder Accuse Arrested

 

முன்னாள் காதலனை காணச்சென்ற பெண் காதலனால் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை காப்புக்காடு பகுதியில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த வாலாஜாபேட்டை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பெண்மணி காவேரிப்பாக்கம் கடப்பேரி பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் முடிந்து கணவர், 5 மாத பெண் குழந்தை இருக்கிறது. 

கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராசத்திபுரம் பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை தனிப்படை காவல் துறையினர் பெங்களூரில் கைது செய்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில், ரேஷ்மாவுக்கும் - குமரனுக்கும் இடையே காதல் இருந்தது அம்பலமானது. 

Ranipet

திருமணத்திற்கு முன்பு இருந்த காதல், வேறொரு நபருடன் திருமணம் செய்த பின்னரும் தொடர்ந்து வந்ததால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர் வந்த ரேஷ்மாவை, வாலாஜாபேட்டை காப்புக்கட்டில் குமரன் தனிமையில் சந்தித்து இருக்கிறார். 

அப்போது, இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் குமரன் தனது காதலியை அடித்து கொலை செய்து பெங்களூர் தப்பி சென்றுள்ளார். தனிப்படை காவல் துறையினர் குமரனை கைது செய்தபின்னர் உண்மை அம்பலமாகவே, அவரின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.