புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
தகாத உறவு இளம் ராணுவ வீரர் கத்தியால் குத்திக்கொலை.. இளைஞர் கைது.!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் வேலமுத்து- பாக்கியலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 24 வயதான வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வேல்முருகன் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியுள்ளார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வேல்முருகன் எழுந்து வராததால் அவரது தாய் பாக்கியலட்சுமி சென்று பார்த்த போது வேல்முருகன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து கத்தி கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாசார்பட்டி போலீசார் விசாரணை செய்ததில் அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அந்த பெண்ணின் கணவர் மாரிச்சாமி என்பவர் நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளார். இதனையடுத்து மாரிசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.